அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ பட தணிக்கை சான்றிதழ் வெளியானது…

அதர்வா நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கிய திரைப்படம் ’ட்ரிக்கர்’.இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பிரமோஷன் பணியை தொடங்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’, விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார்.இப்படத்தில் அதர்வா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Atharvaa - Trigger

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ’குருதியாட்டம்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ படமும் அவருக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.