சூர்யா 42 அறிவிப்பால் இணையத்தை தெறிக்கவிடும் சூர்யா ரசிகர்கள்

சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது திரைப்படம் தொடங்கப்பட்டது. மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் அப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

‘சிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் தேவிஸ்ரீபிரசாத் சூர்யாவின் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே தற்போது அப்படத்தில் இருந்து அனைவரும் எதிர்பார்த்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை 10 மணிக்கு சூர்யா 42 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சூரிய ரசிகர்கள் இணையத்தில் சூர்யா குறித்த விடையங்களை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

SURIYA 42