புஷ்பா 2வில் சூப்பர் கதாபாத்திரத்தில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளிக் குவித்தது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்’ உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், ‘புஷ்பா 2’ கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்திலும் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு சமந்தா நடனம் ஆடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து முன்னணி நடிகை சாய் பல்லவியும் புஷ்பா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

rashmika, samantha, sai pallavi