திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட கோப்ரா – மோசமான வசூல் நிலவரம்

‘கோப்ரா’ திரைப்படம் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவானது. இத் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்துள்ளதால் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மோசமான விமர்சனங்களை பெற்ற கோப்ரா திரைப்படம் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது. கோப்ரா என்ற திரைப்படத்தில் கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தின் நீளம் பெரிய குறையாக இருந்த நிலையில், காட்சிகளில் 30 நிமிட குறைப்பு செய்யப்பட்டபோதும் கோப்ரா வசூல் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சுத்தமாக திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 50 கோடிக்கு கூட வசூலிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Cobra, vikram, கோப்ரா, விக்ரம்
adbanner