மணமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!

யூடியூபில் பிரபலமான விக்னேஷ் காந்த் திருமணம் செப்டம்பரில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று விக்னேஷ் தான் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விக்னேஷ் காந்த் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

Vigneshkanth, Sivakarthikejan, Gnasammantham, 07th Sep 2022

அந்த வகையில் விக்னேஷ்காந்தின் திருமணத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு மணமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும் இந்த திருமணத்தில் பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தம் அவர்கள் தாலி எடுத்து கொடுக்க திருமணம் இனிதாக நடைபெற்றது.

தனது திருமணம் குறித்த புகைப்படங்களை விக்னேஷ் காந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. மேலும் விக்னேஷ் மற்றும் அவரது மனைவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.