யுவனுடன் பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம்

நடிகர் தனுஷ் வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடித்த ’நானே வருவேன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ‘வீரா சூரா’என்ற சிங்கிள் பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் பிரபலம் ஒருவரும் பாடியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

Danush, Nane varuven, Yuvan Shankar raja, kalaipuli S.Thanu, muththuchippy

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியிருக்கிறார் என்று ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான முத்துச் சிப்பியும் பாடியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.