டுவிட்டரில் இருந்து மட்டும் வெளியேறிய நடிகை ராஷிகண்ணா காரணம் என்ன?

சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நடிகை ராஷி கண்ணா திடீர் என டுவிட்டரில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் ராஷி கண்ணா என்பதும் அவரது நடிப்பு இந்த படத்தில் கவனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் ராஷி கண்ணா ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தவர். தற்போது கார்த்தியுடன் ’சர்தார்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

Rashi Khanna, Danush, Thiruchittampalam, Imaikka Nodikal, 07th Sep 2022

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து உங்களுடன் இருப்பேன் என்றும் தெரிவித்த ராஷி கண்ணா திடீரென தனது டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இதனால் அவரது டுவிட்டர் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிவிட்டரில் ராஷிகண்ணா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவதால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.