நதியாவின் இளமை ரகசியம்

கடந்த 1985ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பின் அவர் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட வேடங்களிலும் சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நதியாவுக்கு தற்போது 55 வயது ஆகியுள்ள நிலையில் இன்னும் 25 அல்லது 30 வயது இளம்பெண் போல் இளமையாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர் தனது இளமை ரகசியம் குறித்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நதியா அதன்பின் திரையுலகில் இருந்து விலகி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ’எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்து வரும் நதியா தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இந்த நிலையில் தனது இளமை ரகசியம் குறித்து ஏற்கனவே பல பேட்டிகளில் அவர் கூறியது என்னவெனில் ’மனதில் மகிழ்ச்சியுடன், யார் மீதும் கோபப்படாமல் இருந்தால் இளமையாக இருக்கலாம் என்றும் இருப்பது சில ஆண்டுகள், அந்த சில ஆண்டுகளில் நாம் எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் சோகம் இல்லாமல் கவலை இல்லாமல் இருப்பதே என்னுடைய இளமை ரகசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை நதியா உடற்பயிற்சி மற்றும் யோகாசெய்யும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு உள்ள நிலையில் இதுவும் அவரது இளமைக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version