ஒரே நாளில் மல்லுக்கட்டும் கணவன் மனைவி

திரையுலகில் நட்சத்திரமாக இருக்கும் கணவன்-மனைவியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா என்பதும் அவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்என்பதும் தெரிந்ததே.

Nakarjuna, Amala, Kanam, Piramashthra, 07th Sep 2022

இந்த நிலையில் தற்போதும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுன் தற்போது ‘பிரம்மஸ்திரா’ என்ற படத்தை நடித்துள்ளார்.திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த அமலா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’கணம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நட்சத்திர தம்பதிகளான நாகார்ஜுனா மற்றும் அமலா ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அமலா நடித்த ’கணம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது கணவர் நாகார்ஜூனா நடித்த ‘பிரம்மஸ்திரா’ என்ற திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருக்கிறது.

மேலும் தனது பெற்றோர் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருப்பதற்கு நடிகர் அகில் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.