உஷாரய்யா உஷாரு, அந்த நடிகையும் பிக் பாஸ் வாராராம்?

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ். கடந்த பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகும் போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய கமலஹாசன் அதன் பின்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார்.

அதனால் சிம்புக்கு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதனால் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. அதர்க்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளராக நடிகை ரேகா நாயர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறித்த செய்தி களமிறங்கும் சக போட்டியாளர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன்ர்.

Rekha Nair bigg boss tamil 6