நடிகை அமலாபாலுடன் 2வது திருமணம் ஆதாரத்தை சமர்ப்பித்த பவ்நிந்தர் சிங்

நடிகை அமலா பால் திரைத்துறையில் மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை, காடவர் போன்ற படங்களில் நடித்தவர்.

அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014ல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின் அவர் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அவர்கள் திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மை இல்லை. போட்டோஷூட் தான் என விளக்கம் கொடுத்தார் அமலா பால்.

அப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பவீந்தர் சிங் மீது அமலா பால் தற்போது பாலியல் புகார் அளித்து இருக்கிறார். விழுப்புரம் அருகில் இருக்கும் ஆரோவில் பகுதியில் அமலா பாலுக்கு சொந்தமான வீட்டில் பவீந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் லீக் செய்துவிடுவேன் என அவர் மிரட்டுகிறார் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து பவீந்தர் சிங் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர் காவல்துறையினர். இதனையடுத்து வானூர் நீதிமன்றத்தில் பவ்நிந்தர் சிங் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்த போது அமலா பாலுக்கும் தனக்கு நடந்த பதிவுத் திருமண சான்றிதழை பவீந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

7.11.2018ல் பஞ்சாப் மாநிலம் புஷ்கரில் உள்ள ராதிகா பேலஸில் திருமணம் நடந்ததாக ஆதாரத்துடன் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகை அமலாபாலுக்கு பவ்நிந்தர் சிங்குடன் திருமணம் நடந்தது உறுதியானது.