இனி அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் – சமந்தா எடுத்த பல அதிரடி முடிவுகள்

கடந்த ஆண்டு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருவரது பிரிவுக்கும் காரணம் திரையுலகில் சமந்தா காட்டிவரும் அதிக கவர்ச்சியின் தாக்கம் தான் என இன்னமும் கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மேலும் நாகசைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறேன் என்றும் சமந்தாவின் அப்பா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

samantha

அதனைத்தொடர்ந்து திரையுலகில் சமந்தாவும் பல முடிவுகளை எடுத்துள்ளாராம். அதன்படி இனி வரும் எந்த ஒரு படத்திலும் கிளாமராக நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்மின்றி நடிகர்களுடன் எந்த ஒரு நெருக்கமான காட்சியிலும் நடிக்க மாட்டார்.

மேலும் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன், அரைகுறை உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்று தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை சொல்கிறாரராம் சமந்தா.