விவாகரத்துக்கு பின் முதன் முதலாக நாக சைதன்யா குறித்து கருத்து தெரிவித்த சமந்தாவின் தந்தை

கடந்த ஆண்டு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவாகரத்து முடிவு குறித்து சமந்தாவின் தந்தை தனது பேஸ்புக்கில் உணர்ச்சிகரமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர், ‘முதலில் சமந்தாவின் முடிவை அறிந்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ஆனால் இது அவரது முடிவே என்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

Samantha, Nakasaithanja, 06th Sep 2022

மேலும் திருமண புகைப்படங்கள் மற்றும் வரவேற்பு புகைப்படங்களையும் பதிவு செய்து இன்னும் அதை தான் மறக்கவில்லை என்றும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே தனக்கு ஒன்றுதான் என்றும் தெரிவித்து உள்ளார்.

விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மேலும் நாகசைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறேன் என்றும் சமந்தாவின் அப்பா பதிவு செய்துள்ளார். இந்த பதிவை சமந்தா ரசிகர்கள் மட்டுமின்றி நாக சைதன்யாவின் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.