எனது பயணம் முடியும் காலம் நெருங்கிவிட்டது – பாடகி சின்மயி….

நடிகை சமந்தாவின் பெரும்பாலான தெலுங்கு திரைப் படங்களுக்கு டப்பிங் கொடுத்துவந்தவர் பாடகி சின்மயி. இவர் தற்பொழுது இனி சமந்தாவுக்கு டப்பிங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்மயி தமிழ் தெலுங்கு திரையுலகில் பாடகியாக மட்டுமின்றி பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார். அவர் தமிழின் முன்னணி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா உள்பட பல நடிகைகளுக்கு பின்னணி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா தற்போது தெலுங்கில் தானே சொந்தமாக டப்பிங் செய்து வருகிறார். என்றும் இனி அவருக்கு டப்பிங் குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Sinmaji, Samantha, Tamanah, Kajal agarwal, Trisha, 06th Sep 2022

எனது தோழியான சமந்தா தனது படங்களுக்கு அவரே டப்பிங் பேசி வருவதால் அவருக்கு பின்னணி பேசும் வாய்ப்பு எனக்கு இனி கிடைக்காது என்றே நினைக்கின்றேன் என்றும் தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடியும் காலம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன் என்றும் சின்மயி கூறியுள்ளார்.