தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் ‘பப்ளி பவுன்சர்’.படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படம் வரும் 23ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலரை நடிகை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை தமன்னா போல்டான நடிப்பு மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன என்பதும் நடிகை தமன்னா ஒரு பெண் பவுன்சராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மது பந்தார்கர் இயக்கத்தில் தனிஷ்க் பக்சி மற்றும் கரண் மல்ஹோத்ரா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வினித் ஜெயின் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.இந்த படம் தமன்னாவின் அடுத்த வெற்றிப் படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.