பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ’சொப்பன சுந்தரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ’சொப்பன சுந்தரி’படமாகும். நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ‘லாக்கப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் த்ரில் மற்றும் காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அருவி மற்றும் கோலமாவுகோகிலா அளவுக்கு பேசப்படும் படமாக இருக்கும் என்றும் இது ஒரு சாதாரணமான நாயகிக்கு முக்கியத்துவ படமாக இருக்காது என்றும் இயக்குனர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஒரு சேல்ஸ் கேர்ள் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி என்றும் வடசென்னை பகுதியில் நடக்கும் கதையாக இந்த படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.