பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அமீர்- பாவனி ரெட்டி காதல்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் போட்டியாளர்களாக இருந்தனர் என்பதும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நிலையில் திடீரென ஒருநாள் தனது காதலை வெளிப்படுத்திய அமீர், பாவனிக்கு முத்தம் கொடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழும் காதல் வெளியே வந்தவுடன் மறைந்து விடும். இவ்வாறு இருகின்ற நிலையில் அமீர்- பாவனி ரெட்டி காதல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அமீர், பாவனி ஆகிய இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இருவரும் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

Amir, Pavani Reddy, 05th Sep 2022

இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றுள்ள அமீர்- பாவனி ரெட்டி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்ற நிலையில் பாவனி ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் அமீருக்கு நேரடியாகவே தனது காதலை புரபோஸ் செய்துள்ளார்.

உங்களுடன் நடனம் ஆடுவது மிகப்பெரிய சவால் என்றாலும் நீங்கள் நல்ல மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சரிவர நடனம் ஆடத்தெரியாத என்னை டைட்டில் வின்னர் பெறும் அளவுக்கு ஆட வைத்திருக்கிறீர்கள். இது ஒரு சிறப்பான பயணம், இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் நன்கு அனுபவித்தேன். உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் மிகச்சிறந்த மனிதர், மாஸ்டர் மற்றும் மிகவும் உறுதியானவர், நல்ல நண்பர்.

எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து நாம் தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் மிகச் சிறந்த ஜோடியாக இருப்பீர்களா? அந்த நாளுக்காக நான் காத்திருக்கின்றேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா? ஐ லவ் யூ’ என்று பாவனி ரெட்டி பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து பாவனி காதலை புரபோஸ் செய்து விட்ட நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.