கொரோனா குமார்’ படம் சிம்புவின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு படமாக இருக்கும் – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தகவல்

சிம்பு நடிப்பில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதேபோல் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரசிகர்கள் மனதில் சிம்புவின் அடுத்த படம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ‘கொரோனா குமார்’ படம் விரைவில் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கொரோனா குமார்’ படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்பட்டது.

Simbu, Venhu thaninthathu kaadu, Paththu thala, Isary Kanesh, Kokul, Corona Kumar 05th Sep 2022

சமீபத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘கொரோனா குமார்’ குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

’பத்து தல’ படத்தை முடித்தவுடன் ‘கொரோனாகுமார்’ படத்தில் சிம்பு நடிப்பார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் ‘கொரோனா குமார்’ கண்டிப்பாக வருவார் என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிம்புவின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.