
தற்போது பிரபல நடிகையுடன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு திரை உலகின் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீ பிரசாத் என்பதும் இவர் தற்போது ’சூர்யா 42’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா என்பவரை 42 வயதாகும் தேவிஸ்ரீபிரசாத் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது குறித்து நடிகை பூஜிதா விளக்கமளித்துள்ளார். ‘நானும் தேவிஸ்ரீபிரசாத்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்றும் இது போன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை அவருடன் நான் டேட்டிங் கூட சென்றதில்லை என்றும் தற்போது வரை நான் சிங்கிளாக தான் இருக்கிறேன்’ என்றும் நடிகை பூஜிதா கூறியுள்ளார்.
இதனை அடுத்து தேவிஸ்ரீபிரசாத் – பூஜிதா திருமண குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.