ஆத்மிகா வெளியிட்ட படங்கள் இணையத்தில் வைரல் 5 செப்டம்பர் 2022

Aathmika 05–09–2022

Aathmika – 5th September 2022 – ஒரு நடிகை, மாடல் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் ஆவார். ஆத்மிகா பானுச்சந்திரன் 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் ஹிப்ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு (2017) படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானார்.

விஜய் ஆண்டனியுடன் ஆத்மிகா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கோடியில் ஒருவன். சோனம் பஜ்வா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோருடன் இணைந்து காட்டேரி திரைப்படத்தில் ஓவியாவிற்கு பதிலாக அவர் நடித்தார். துருவங்கள் பதினாறு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய அரவிந்த் சுவாமி மற்றும் சுந்தீப் கிஷனுடன் அவர் நடித்த நரகாசூரன் திரைப்படம் பல்வேறு காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த அடுத்த படம் கண்ணை நம்பாதே தற்போது தயாரிப்பில் உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆத்மிகாவின் சமீபத்திய வைரலான புகைப்படங்கள் இதோ.