நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்த ரசிகர் – வைரல் வீடியோ

பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் செல்பி எடுக்க வந்த நபர் செய்த விஷயத்தால் நடிகை அதிர்ச்சி ஆனா வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாலிவுட் நடிகை கீர்த்தி செனோன் உடன் செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த காரியம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை கீர்த்தி செனோனை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் அதிகம் கூடி இருந்த நிலையில், ஒரு குள்ளமான நபர் நடுவில் புகுந்து செல்பி எடுக்க வந்தார்.

அவரை போட்டோகிராபர்கள் கிண்டல் செய்த நிலையில் நடிகை அந்த நபரை அருகில் வர வைத்து அவருக்காக கீழே வந்து அவரது போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார். ஆனால் அந்த நபர் அடுத்து கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு இன்னொரு செல்பி எடுங்க என நடிகையை பார்த்து சொன்னதும் ஷாக் ஆகி விட்டார் நடிகை.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.