சத்குரு ஜக்கி வாசுதேவ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள் . அந்த வகையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சத்குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
தமன்னா கூறியிருப்பதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சத்குரு ஜி. நீங்கள் ஒரு வாழும் மாஸ்டர். என் வாழ்க்கையில் இவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்தவர். உங்கள் வழிகாட்டுதலின் கீழ், என்னில் இவ்வளவு பெரிய ஆற்றல் இருப்பதை கண்டேன். அதற்காக நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். மேலும் சத்குரு ஜி உடனான எனது சந்திப்புகளிலும், ஈஷா யோகா மையத்தில் நான் செய்த நிகழ்ச்சிகளிலும், ஒவ்வொருவரும் மிகவும் நேர்மறையாக உற்சாகமாக இருப்பதை கண்டேன். அங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட மென்மையான குணம் உள்ளது. அதற்கு நீங்கள் தான் காரணம்.

நாம் அனைவரும் வாழும் பைத்தியக்கார உலகில் நீங்கள் அனைவரையும் வழிநடத்தி செய்யும் மகத்தான சேவை ரொம்ப முக்கியம், தொடர்ந்து எனக்கு வழிகாட்டுங்கள், ஊக்கமளியுங்கள்’ என்று தமன்னா தெரிவித்துள்ளார்.