‘தலைவர் 170’ இல் ரஜினியுடன் இணையும் பிரபல மிரட்டல் நாயகன்!

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ’டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.

மேலும் ’தலைவர் 170’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க அரவிந்த் சாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தளபதி’ படத்தில் தான் அரவிந்த்சாமி திரையுலகில் அறிமுகமானார் என்பதும் அதன் பின்பு 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினியுடன் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

rajini arvind swamy
adbanner