வெற்றிமாறன் பிறந்த நாளை கொண்டாடிய ‘வாடிவாசல்’ படக்குழுவினர்!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் ’பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தேசிய விருதுகள் பெற்றவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் சூர்யாவின் ’வாடிவாசல்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vertimaaran, Vaadivaasal, Suriya, Pollathavan, 04th Sep 2022

இந்த நிலையில் ’வாடிவாசல்’ படக்குழுவினர் வாடிவாசல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கேக் தயார் செய்த நிலையில் அந்த கேக்கை படக்குழுவினர் முன் வெற்றிமாறன் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் ’விடுதலை’ படக்குழுவினரும் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

vetrimaaran
vetrimaaran