கட்டுப்பாடின்றி எகிறும் விஜய்சேதுபதி பட பட்ஜெட்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, ராஜீவ் மேனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டு தற்போது ரூ.40 கோடிக்கும் அதிகமாக செலவாகி விட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படமத்தின் கதையம்சமானது காவல்துறையினர் பயிற்சி பெறும் காலங்களில் நடைபெறும் சம்பவங்கள் குறித்த பின்னணியை கொண்டவை என கூறப்படுகிறது. இதே கதையம்சங்கள் கொண்ட படங்கள் வெளிவந்ததால் திரைக்கதையில் பல மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வரும் இரயில் விபத்து காட்சி ஒன்று ரூபாய் 8 கோடிக்கு மேல் செலவு செய்து படமாக்கப்பட இருப்பதாகவும் இந்த காட்சிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இயக்குனர் வெற்றிமாறன்‘விடுதலை’ திரைப்படத்தை நினைத்ததை விட பல மடங்கு பிரம்மாண்டமாக வேற லெவலில் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளந்து.

Vijay Sethupathi, Viduthalai, Soori, Rajivmenon, vertimaaran, 04th Sep 2022
adbanner