ஒரு தாளை கூட தூக்கி வீச முடியவில்லை – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வைரல் பதிவு …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்திருந்தார். அவர் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் என்பதும் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் கோவிலுக்கு சென்று வழிபடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர் என்பதும் ’3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தை இயக்க உள்ளார் என்றும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இணையதளங்களில் கூறப்படுகின்றது .

Aishwaryaa Rajinikanth, 04th Sep 2022

இந்த நிலையில் ஸ்பைரல் போடப்பட்ட கோப்புகள் கொண்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ‘காகிதத்தில் பேனாவால் கதை எழுதுவது ஒருவித உணர்வு. கதையின் பரிணாமம் என்பது முதலாவது எழுதுவது, 2வது அது தட்டச்சு செய்வது அதன்பின் சில மாற்றங்களை சேர்ப்பது என்பது வழக்கமானதாகும்’ என கூறியிருக்கிறார்.

காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும்போது அதில் இருந்து ஒரு தாளை கூட தூக்கி எறிய எளிதில் மனசு வராது. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை படிக்கும்போது அதில் ஏதாவது புதிதாக தோன்றலாம். அதனை அப்டேட் செய்யவே நாம் விரும்புவோம்’ என பதிவு செய்துள்ளார்.