தளபதி 67 இல் அந்த சூப்பர் நடிகரும் இணைகிறாரா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுன் உட்பட ஆறு வில்லன்களும், த்ரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நடிகைகளும் நடிப்பதாக கூறப்பட்டது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படத்தின் முதல் பாதியை ஆக்கிரமித்து தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியவர் பகத் பாசில். இவரே தற்போது விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 67’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

bhagath basil vikram

சில நாட்களுக்கு முன் பகத் பாசிலுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் என்று லோகேஷ் கனகராஜ் இடம் செய்தியாளர்கள் கேட்டபோது ’விரைவில் இணைவோம்’ என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோருடன் பகத்பாசில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் இதில் ‘தளபதி 67’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைக்கப்பட்டுள்ளதால், பகத்பாசில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

Vijay, thalapathy-67, Arjun, Logesh Kanagaraj, Trisha, samantha, Keerhy suresh, Pakath Pasil, 04th Sep 2022