சினிமா தயாரிப்பாளர் சென்னையில் கொலை…

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவருடைய பிணம் பிளாஸ்டிக் பையில் போட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மதுரவாயல் என்ற பகுதியை அடுத்துள்ள சின்மயா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது பிணம் அந்த பகுதியில் உள்ள சாலையில் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் லக்ஷ்மி கரண் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ராம்கி நடித்த ‘சாம்ராட்’ மற்றும் ’ஒயிட்’ ஆகிய படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர் பாஸ்கரன் நேற்று காரில் வீட்டில் இருந்து சென்ற நிலையில் அவர் திரும்பி வரவில்லை என்று அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அப்போது சாலையோரம் பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட பிணத்தை கண்டு பிடித்ததை அது அவரது தந்தையின் உடல் தான் என்பதை உறுதி செய்தார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் உடல் வீசப்பட்ட சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Baskaran, Samrad,Ojid,04th Sep 2022