விரைவில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் – கவுதம் மேனன்

கடந்த 2006ஆம் ஆண்டு ’வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது நாம் அறிந்தவிடயமே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ’வேட்டையாடு விளையாடு 2’ படம் குறித்த கேள்வியை கமல்ஹாசன் கேட்க அதற்கு கௌதம் மேனன் பதில் கூறியுள்ளார்.

வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் தருவதாக கவுதம் மேனன் கூறியிருந்தார். ஆனால் இன்னும் அந்த திரைக்கதை வரவில்லை என்றும் கமல்ஹாசன் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த இயக்குனர் கவுதம் மேனன், ‘எழுத்தாளர் ஜெயமோகன் ’வேட்டையாடு விளையாடு 2’ படத்திற்கான திரைக்கதையை எழுதி வருகிறார் என்றும் சீக்கிரம் வரும் சார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’வேட்டையாடு விளையாடு ’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Hasan, Veddaijadu vilaijadu, Gowtham Menon, Jeyamohan, 03nd Sep 2022