நயன்தாரா விக்னேஷ் திருமணம் குறித்து நடிகை ஸ்ரீநிதி கூறும் கருத்து.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் தற்போது ஸ்பெயின் நாட்டில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ’வலிமை’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து அஜித் ரசிகர்களின் கண்டங்களை பெற்றவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி . அதேபோல் சிம்புவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய போவதாகவும் கூறி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்வாறு இருக்கின்ற நிலையில் நயன்தாராவை திருமணம் செய்த விக்னேஷ் குறித்து அவர் கூறிய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பொருத்தம் குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி இந்த ஜோடி குறித்து கூறும் கருத்து யாதெனில் உண்மையில் இந்த திருமணத்தால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. நயன்தாராவுக்கு ஒரு தமிழ்ப் பையன் கணவராக கிடைத்துள்ளார். அவர் நயன்தாராவை நன்றாக பார்த்து கொள்வார். எனவே என்னைப் பொறுத்த வரை நயன்தாரா தான் லக்கி என்று கூறியுள்ளார்.

Nayanthara, Viknesh sivan, Srinithi, 03nd Sep 2022

adbanner