வேற லெவல் ‘வெந்து தணிந்தது காடு’ டிரைலர், மாஸ் காட்டும் சிம்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

இந்த டிரைலரில் கௌதம் மேனன் குரல் பின்னணியில் சிம்புவின் கேரக்டர் மற்றும் அவரை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் பற்றி விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. 2 நிமிடத்துக்கு மேல் இருக்கும் இந்த டிரைலரில் ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து பல சவால்களை சந்தித்து ’டான்’ என்கிற அந்தஸ்தை அடைவது குறித்த கதையம்சம் கொண்டதாக இத் திரைப்படம் அமையப்பட்டுள்ளதாக
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த பட டிரைலரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அவருடைய பின்னணி இசை மற்றும் பாடல்கள், கௌதம் மேனனின் கவிதைத் தனமான ஷாட்கள் ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்களாக பார்க்கப்படுகின்றதுடன் வரும் 15ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் இத் திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

Simbu, Gowtham menon, Ventdhu Thanindhathu Kaadu 03nd Sep 2022

மொத்தத்தில் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ட்ரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner