விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன் இணைந்து நடிக்கும் ஆர்யான் படத்தின் மாஸ் மோஷன் போஸ்டர்!

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந் நிலையில் இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் நாயகிகளாக ஷராதா ஸ்ரீநாத் மற்றும் வாணிபோஜன் நடிக்க உள்ளனர். விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தை பிரவீன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

Vishnu Vishal, Selvaraghavan, Vanibhojan, Saratha srinath, 03nd Sep 2022

இத் திரைப்படத்திற்கு ’ஆர்யான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.