புது முக நடிகருடன் நவம்பர் நான்கில் வெளியாகும் காதல் காவியம் ‘பனாரஸ்’

நவம்பர் மாதம் நான்காம் திகதி புதுமுக நடிகர் ஜையீத் கான், பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் காதல் காவியமான ‘பனாரஸ்’ திரைப்படம், வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத் திரைப்படம் கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரும், பல விருதுகளை வென்ற படைப்பாளியுமான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கிறது. இத் திரைப்படத்தில் ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளதுடன் , இவர்களுடன் தேவராஜ், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலரும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என். கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருவதோடு . புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Panarash, Saijithkaan, Sonal Mondorijo, 3nd Sep 2022