சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் மிகப் பெரிய சாதனை குறித்த தகவல்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ’டான்’ திரைப்படம் கடந்த மே 13ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் ஒரு சில நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டியது என்பதை முன்னரே அறிந்தோம்.

மேலும் இத் திரைப்படத்தின் மொத்த வசூல் 130 கோடி என தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த பல திரைப்படங்கள் 100 கோடி முதல் 400 கோடி வரை வசூல் செய்து இருந்தாலும் ‘டான்’ திரைப்படத்தின் ரூ.130 கோடி வசூல் என்பது இதுவரை தமிழ் சினிமாவில் மிகப் பெரும் சாதனை ஆகும்.

இந்த நிலையில் ஒரு அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படமே 100 கோடி ரூபாய் வசூல் செய்தது ‘டான்’ திரைப்படம். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் சிபிசக்கரவர்த்திக்கு கிடைத்துள்ளது என்பதும் இந்த படத்தையும் ‘டான்’ திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

Don, Sivakarthikejan, cibichakkaravarththi, 02nd Sep 2022