நயன்தாரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு காரணம் என்ன??

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கோல்ட்’. இந்த திரைப்படம் ஓணம் திருவிழாவின் போது அதாவது செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடந்து வந்தது. இந்த நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் திடீரென இந்த படம் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் சில முக்கிய பணிகள் முடிவடையாததால் இந்த படம் செப்டம்பர் 15 அல்லது 16ஆம் தேதி ரிலீசாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தெரிவித்த நிலையில் நயன்தாராவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கோல்ட்’ திரைப்படத்தை திரையரங்குகளில் செப்டம்பர் 8 ஆம் தேதி கண்டு ரசிக்கலாம் என்று காத்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு இயக்குனரின் இந்த அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Nayanthara, Gold, 02nd of Sep 2022