“கொஞ்சம் பேசினால் என்ன” படத்தின் டீசர் இணையதளங்களில் வைரல்!!

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ’கொஞ்சம் பேசினால் என்ன’ திரைப்படம். இதில் வினோத் கிஷான், கெளதம் சுந்தர்ராஜன், விஜே ஆசிக் உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இத் திரைப்படத்தை கிரி முர்ஃபி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் தீபன் சக்கரவர்த்தி இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கவிதைத்தனமான காதல் கதையை இந்த படத்தில் இயக்குனர் சொல்ல முயற்சித்துள்ளார் என்பது ஒரு நிமிட டீசரில் இருந்து அறிய முடிகிறது.

Konjam Pesinaal Yenna Teaser, Keerthi Pandian, 02nd of Sep 2022

இந்த நிலையில் வினோத் கிஷான் மற்றும் கீர்த்தி பாண்டியனின் ரொமான்ஸ் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் ரொமான்ஸ் வசனங்கள் இந்த படத்தின் பிளஸ் என்றும் ரசிகர்கள் கருத்து பகிர்கின்றனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது.