வெளியாகி 24 மணி நேரத்தில் ‘பிம்பிலிக்கி பிலாபி’ சிங்கிள் யூடூபில் பெற்ற பார்வைகள்

அனுதீப் இயக்கத்தில் ,சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிரின்ஸ்’. திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற ’பிம்பிலிக்கி பிலாபி’ என்ற சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது. இதுவரை 4 மில்லியன் பார்வைகளை குறித்த பாடல் பெற்றுள்ளது. இந்த பாடலை தமன் இசையில் அனிருத், ரம்யா பெஹரா, சாஹிதி ஆகியோர் பாடியுள்ளானர் , விவேகா எழுதியுள்ளார்.

Bimbilikki Pilapi, Sivakarthikeyan,Prince, 02nd of Sep 2022

மேலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியா நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது கூறிப்பிடத்தக்கது.