தனுஷின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி…..

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த திரைப்படம் ’’நானே வருவேன்’’ செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில், தனுஷ் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் உருவாகிய திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் ’நானே வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 30 என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதே செப்டம்பர் 30ஆம் தேதி தான் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்தோம். அந்த வகையில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் என்பதை விரைவில் பார்ப்போம்.

மேலும் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Dhanush, Thiruchitrambalam, Naane Varuven, Ponniyin Selvan,02nd of Sep 2022