இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது அத்துடன் இந்த விழாவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளார்.
இந்த வகையில் இதற்காக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகன் சிம்பு மற்றும் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் பிரமாண்டமான முறையில் அழைத்து வர வேண்டும் என்று வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.