தனுஷின் அடுத்த திரைப்படத்தின் வெளியான மாஸ் தகவல்!!

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள ’வாத்தி’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தனுஷின் அடுத்த திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத் திரைப்படம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகயிருக்கிறது. ‘கேப்டன் மில்லர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டடுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் என்பது தெரிந்ததே. மேலும் இத் திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகயிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Dhanush, Captain Miller, 01st of Sep 2022