ஸ்ரீநிதி ஷெட்டியின் புதிய படங்களின் தொகுப்பு 1 செப்டம்பர் 2022

Srinidhi Shetty 01–09–2022

Srinidhi Shetty – 1st September 2022 – விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக அதிக பட்ஜெட் படமாக ‘கோப்ரா’ உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்ததை, படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்நிலையில் ‘கோப்ரா’ பல தடைகளின் பின் தற்போது ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் முன்னதாக தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது தெரிந்ததே.

ஸ்ரீநிதி ஷெட்டியின் புதிய அட்டகாசமான புகைப்படங்களைப் படக்குழுவினர் பகிர்ந்துள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.