ஒரு சீனையே அப்பட்டமாக காப்பியெடுத்த கோப்ரா படக்குழு? – வைரல் வீடியோ

‘கோப்ரா’ திரைப்படம் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவானது. இத் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்துள்ளதால் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோப்ரா திரைப்படத்தில் ஒரு காட்சி அப்படியே INSiDE என்ற குறும்படத்தில் இருந்து காப்பிடித்துள்ளதை நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்நிலையில், மோசமான விமர்சனங்களை பெற்ற கோப்ரா திரைப்படம் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது. கோப்ரா என்ற திரைப்படத்தில் கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் நடித்துள்ளார். படம் கதை ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் மேலும் படத்தின் நீளம் பெரிய குறையாக உள்ளது.