வசூலில் சரிவு கண்ட கோப்ரா – படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

‘கோப்ரா’ திரைப்படம் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவானது. இத் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்துள்ளதால் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மோசமான விமர்சனங்களை பெற்ற கோப்ரா திரைப்படம் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது. கோப்ரா என்ற திரைப்படத்தில் கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் நடித்துள்ளார். படம் கதை ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் மேலும் படத்தின் நீளம் பெரிய குறையாக உள்ளது.

அதனால் தற்போது படக்குழு 30 நிமிட காட்சிகளை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 20 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம்.

Exit mobile version