கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்தின் மாஸ் தகவல்!

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ’கோல்மால்’ ’தெனாலி’ மற்றும் சமீபத்தில் வெளியான ’கூகுள் குட்டப்பா’ ஆகிய படங்களை தயாரித்த நிலையில் இது அவரது நான்காவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹிட் லிஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இயக்குகின்றனர். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் விஜய் கனிஷ்கா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறபடுகின்றன.

K.S Ravikumar, Vijay Kansika, Hit List, Sarathkumar, 31st of August 2022