அருண் விஜய் நடித்த ’சினம்’ படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகிறது.

அருண் விஜய் நடித்த ’யானை’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவருடைய அடுத்த படமான ’சினம்’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகிறது.

இப்படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். மர்மமாக நடந்த ஒரு கொலையை விசாரணை செய்த போது கிடைக்கும் திடுக்கிடும் தகவல்கள், அதன்பின் அவர் கொலையாளியை கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது. மேலும் டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் த்ரில் காட்சிகள் இருப்பதால் இது ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Arun vijay, Sinam, 31st of August 2022

மேலும் இத் படத்தில் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் ஷபீர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர், வெங்கடேஷ், பாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.