இணையத்தில் கசிந்த ‘ஜெயிலர்’ படக்கதை?

’ஜெயிலர்’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகிவருகிறது. இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதையும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த படத்தின் கதை சிறைச்சாலை ஒன்றில் ஜெயிலராக ரஜினிகாந்த் இருக்கும் நிலையில், தீவிரவாதியான சிவராஜ்குமார் ஜெயிலில் உள்ள தீவிரவாதி ஒருவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாகவும், அதனை ஜெயிலர் ரஜினிகாந்த் எப்படி தடுக்கின்றார் என்பது தான் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி ஆகியோர் இணைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட ஒருசிலர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த நிலையில் சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ‘O2’ என்ற படத்தில் அவருடைய மகனாக நடித்த ரித்விக் என்ற குழந்தை நட்சத்திரம் ரஜினிகாந்தின் பேரன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Jailer, Rajinikanth, Rithvik, 31st of August 2022