‘வாரிசு’ படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் …

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில், தமன் இசையில் ‘வாரிசு’ திரைப்படம் சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் லேட்டஸ்டாக பிரபல தெலுங்கு நடிகையும் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நந்தினிராய் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவர் தற்போது நடைபெறும் ‘வாரிசு’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Varisu, Vijay , 30th of August 2022

மேலும் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவின் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Varisu, Vijay , 30th of August 2022
adbanner