சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் அப்டேட்…

‘பிரின்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை முன்னரே அறிந்தோம்.

இந்த படத்தில் உக்ரைன் நாட்டின் நடிகை மரியா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனுதீப் இயக்கி வருகிறார். மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ‘பிரின்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தனது ட்விட்டர்ல் பதிவு செய்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக தமன் இசையமைத்து வரும் நிலையில் இந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை அறிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பாத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Sivakarthikeyan, Prince, 30th of August 2022

மேலும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் எனவும், இந்த படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.