“தி லெஜண்ட்” திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் தொடர்பில் வெளியான தகவல்!

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் சரவணா ஸ்டோர் தொழிலதிபர் சரவணன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்போது ‘தி லெஜண்ட்’ படத்தின் வசூல் மற்றும் பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இத் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மொத்த பட்ஜெட் 45 கோடி ரூபாய் என்றும் திரையரங்குகளில் கிடைத்த வசூல் மட்டும் 45 கோடி என்றும் தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாட்டிலைட் உரிமையை 20 கோடிக்கும் ஓடிடி உரிமை 25 கோடிக்கும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்த படத்தின் மொத்த லாபம் 45 கோடி என்றும் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. மேலும் லெஜண்ட் சரவணன் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

The legend, Legend Saravnan, 30th of August 2022