‘வெந்து தணிந்தது காடு’ ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்!

“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது. இத் திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெறறு கொண்டு இருக்கின்றன.

இத் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான பிரமாண்டமான அரங்குகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் இவ் விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வருகை தர இருப்பதாகவும் தகவல் வெளிவந்தன.

அந்த வகையில் தற்போது இந்த விழாவின் அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன அதில் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இரண்டு விஐபிக்கள் மட்டுமே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Simbu, VenduThanindhathu Kaadu, 30th of August 2022